சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி அவர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 13ம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பனகல் மாளிகை வழியாக செல்லும் கூவம் ஆற்றில் ஏதோ ஒரு உருவம் அசைவதாக தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் ஆற்றின் சகதியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அவரின் உடல் முழுவதும் சக்தியில் மாட்டிக்கொண்டு மூச்சு விடமுடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் உடனே தீயனைப்பு துறையினருக்கு ததவல் தெறிவித்துவிட்டு அவர்கள் வருவதர்க்குள் அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அவரே அந்த சாக்கடையில் இரங்கி அந்த பெண்ணை காப்பாற்றினார் இந்த தகவல் தற்ப்போது வெளியாகியுள்ளது இது பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது..!!🙏💐🤝👌