சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து, மீட்பு பணி சேவை, தன்னார்வலர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்திடவும், பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு, பொதுமக்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகரில் சாலையில் தவிக்கும் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு உதவிட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று 21.4.2021 எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், ‘‘காவல் கரங்கள்‘‘ திட்டத்தை துவக்கி வைத்து, உதவி மைய எண்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்பு நிறுவனங்கள், அரசு தொண்டு நிறுவனங்கள், முதியோர், பெண்கள், சிறுவர்களுக்கான உதவும் இல்லங்களின் தொடர்பு எண்கள் அடங்கிய காவல் கரங்கள் கையேட்டினையும், காவல் கரங்கள் பற்றிய குறும்படமும், கொரோனாவும் காவல்துறையும் என்ற Youtube குறும்படத்தையும் காவல் ஆணையாளர் வெளியிட்டார். மேலும் மீட்பு பணி சேவை, தன்னார்வலர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கினார்.