இராயபுரம், துப்புரவு பணியாளர் மோகனசுந்தரம் என்பவர், 22.04.2021 அன்று கொருக்குப்பேட்டை, கண்ணன் ரோடு, ஏகப்பன் தெரு சந்திப்பில் குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பையில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. உடனே, மோகனசுந்தரம் மேற்படி தங்க நகைகளை H4 கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். H4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.தவமணி தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, 10 சவரன் தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்படி குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி மோகனசுந்தரத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.