கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு பிறப்பித்திருக்கும் இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் வழிகாட்டலின் படி ஆலங்குடி உட்கோட்டம், கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் கொரோனா நிவாரண பொருட்களாக காய்கறிகள், அரிசி மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வேலையின்றி கறம்பக்குடி பேரூராட்சி பகுதிகளில் வறுமையுடன் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று கறம்பக்குடி இளைஞர்கள் மற்றும் காவலர்களுடன் சேர்ந்து வழங்கினார்கள்…
பின்னர் நாம் அனைவரும் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் அனைவரும் மாஸ்க் அணிந்தும் தனி மனித இடைவெளி பின்பற்றியும் ஊரடங்கு உத்தரவினை கடைபிடித்தும் பாதுகாப்புடன் இருக்கும் படி கேட்டுக்கொண்டார்கள்.