திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுபடி காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தலைமையில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் குறித்தும், விசாரணைக்கு ஆஜராகாத எதிரிகள் மீது நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடி ஆணைகளைச் சார்பு செய்து வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகரில் பணிபுரியும் அனைத்து காவல் நிலையங்களை சார்ந்த நீதிமன்ற அலுவல் காவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.