கம்ப்யூட்டர், மொபைல் போன்கள் அனைவரிடமும் இருப்பதாலும், பள்ளி, கல்லூரிகள் நீண்ட கால மூடப்பட்டிருப்ப தாலும், ஆன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து விட்டன. அவற்றை பயன் படுத்தி செய்யப்படும் மோசடிகளும் அதிகரித்து சில ஆன்லைன் விளையாட்டுகளில், கிரெடிட் கார்டு எண் குறிப்பிட்டால் தான், அந்த விளையாட்டுயாட்டு தளத்திற்குள்ளேயே துழைய முடியும்.
குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர், ஏ.டி.எம். கிரெடிட் கார்டு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என விரும்பும் பெற்றோர், தங்களின் கிரெடிட் கார்டு விபரங்களை எப்போதாவது தெரிவித்து விடுகின்றனர். அதை நினைவில் வைத்திருக்கும் குழந்தைகள், அப்பா, அம்மா வுக்கு தெரியாமல், கிரெடிட் கார்டுகளை எடுத்தோ அல்லது அதன் எண்களை பதிவு செய்தோ, ஆன்லைன் விளையாட்டு நுழைத்து விடுகின்றனர்.
இதை பயன்படுத்திக் கொள்ளும் மோசடி பேர்வழிகள், பணத்தை அபேஸ் செய்து விடுகின்றனர். எனவே, ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைனில் பிள்ளைகளை அதிக நேரம் செலவிட விடாமல் தடுப்பதில் பெற்றோர் பங்கு அதிகம். இதற்காக பெரிய அளவில் கம்ப்யூட்டர் அறிவு தேவையில்லை. கம்ப்யூட்டர் இல்லாத காலகட்டத்தில் பிள்ளை களை எப்படி கண்காணித்து வந்தனரோ அதுபோல இந்த காலத்திலும் கண்காணிக்க வேண்டும்.
தங்கள் மொபைல் போனில் அல்லது கம்ப்யூட்டர்களில் எந்த வகையான செயலிகளை, டவுன்லோடு செய்துள்ளனர் என்பதை கண்காணிக்க வேண்டும். ஆபத்தான வழிகளை காட்டும் பல செயலிகள் உள்ளன.
அத்தகைய செயலிகள் பக்கம் செல்லவே கூடாது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது, படிப்பு தொடர்பாக இன்டர்நெட்டை பயன்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாதது. அதே நேரம், மொபைல் போனில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறியும் விதத்தை குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும்; அதற்கான அறிவுரையை, பெற்றோர் தான் வழங்க வேண்டும்.
ஜாதி, மத வெறுப்பை ஏற்படுத்தும், வன்முறை தூண்டும் சேனல்கள், சமூகவலை தள பதிவுகள் அதிகம் உள்ளன. அவற்றின் பக்கம் குழந்தைகளை செல்ல விடாமல், ஆர்வம் ஏற்பட விடாமல் செய்யவேண்டியது பெற்றோர் கடமை. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலை தளங்களில், பிரெண்டு ரிக்வெஸ்ட் கொடுப்பதும், அதற்கான விண்ணப்பம் செய்வதிலும் கவனம் தேவை. அதுபோல, நண்பர்களாக யாரை வைத்திருக்கலாம் என்பதிலும், கவனமாக இருக்க வேண்டும். உங்களின் சுயவிபர குறிப்பை, படங்களை பிறர் பார்க்க விடாமலும் – செய்யலாம். இதுபோன்ற எச்சரிக்கையுடன் செயல்பட்டால், ஆன்லைன் ஆனந்தம் தரும். இல்லையேல் ஆபத்து தான்!