2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி 29.08.2021ம் தேதி அன்று மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியியானது தென் மண்டல காவல்துறைத் தலைவர் தா.ச.அன்பு, இ.க.பா. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சரக டிஐஜிக்கள் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை, பழனி, ராஜபாளையம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டுகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை மாநகர துணை ஆணையர்கள் என 18 காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் Pistol மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகளை கொண்டு சுடும் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் Pistol துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல காவல்துறை தலைவர் தா.ச.அன்பு, இ.கா.ப, அவர்கள் முதலிடத்தையும், தேஷ்முக் சேகர், இ.கா.ப, கமாண்டன்ட், த.சி.கா 6ஆம் அணி அவர்கள், இரண்டாம் இடத்தையும், டோங்ரே பிரவீன் உமேஷ் , இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம் அவர்கள், மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ணி. கார்த்திக், இ.கா.ப., அவர்கள், மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் தேஷ்முக் சேகர், இ.கா.ப கமாண்டன்ட், த.சி.கா 6ம் அணி அவர்கள் முதலிடத்தையும், அன்பு, இ.கா.ப காவல்துறை தலைவர் தென் மண்டலம், மதுரை அவர்கள், இரண்டாம் இடத்தையும், டோங்ரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம் அவர்கள், மற்றும் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ணி. கார்த்திக், இ.கா.ப அவர்கள், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இதேபோல மாநிலம் முழுவதும் மண்டல வாரியம் அனைத்து மாநில உயரதிகாரிகளுக்கும் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அதிகாரிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த துப்பாக்கி சுடும் போட்டியை ஜெயச்சந்திரன், இ.கா.ப, அதிவிரைவு படை காவல் கண்காணிப்பாளர் சென்னை அவர்கள் தலைமையில் வந்த காவல் அதிகாரிகள் நடத்தினர்.