தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து சட்டவிரோதமாக போலி கேரளா லாட்டரி சீட்டுகளை தயார் செய்து பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை கைது செய்து லாட்டரி சீட்டு கட்டுகள், ரூபாய் 12 லட்சம் ரொக்கப் பணம், 4 லேப்டாப்கள் மற்றும் 14 செல்போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.