தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். கடந்த ஆண்டு என்னவெல்லாம் செய்தோம்.
எதையெல்லாம் செய்ய தவறவிட்டோம். புதிய ஆண்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும். என்னென்ன பழக்கங்களை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும்.
என்னென்ன பழக்கங்களை கைவிட வேண்டும் என்று சிந்திக்கக்கூடிய நாள் தான் இந்த புத்தாண்டு. இளைஞர்களை பொறுத்தவரை இந்த புத்தாண்டில் ஒரு செய்தி இருக்கிறது.
உங்களிடம் ஒரு கேள்வி. நடந்த முடிந்த புத்தாண்டில் தொழில் ரீதியாக என்ன கற்றுக் கொண்டீர்கள்? ஏதாவது ஒரு வித்தையை கற்றுக் கொண்டீர்களா? விமானம் ஓட்டுதல், கார் ஓட்டுதல், அக்கவுண்டிங், அணுவை உடைத்தல், அறிவியலை கற்றுக் கொண்டீர்களா?
பேச, எழுத, சிந்திக்க புதிதாக கற்றுக் கொண்டீர்களா? இந்த கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டும்.
ஏதாவது ஒரு நூல் படித்தீர்களா? புதிய மொழியை கற்றுக் கொண்டீர்களா? இந்த கேள்விகளை கேட்டுவிட்டு, இளைஞர்கள் ஏதாவது ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும். அது தொழில்ரீதியாக இருக்க வேண்டும். இதுதான் இளைஞர்களின் வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கும்.
நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதியை நாம் செய்யும் தொழில் தான் தீர்மானிக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம். மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு முடித்துள்ளார்”.