செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து காவல்துறை உதவி/ துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், மற்றும் உதவிஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்து வழக்குகளை விரைந்து முடிக்கவும், ஒமைக்ரான் நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்ட- ஒழுங்கு பாதுகாத்தல், சாலை விபத்துகள் குறைத்தல், பெண்குழந்தைகள் பாதுகாப்பு, இணையவெளி குற்றங்கள் தடுப்பு குறித்து அறிவுரை வழங்கினார்…