தஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பத்மநாபன் பணி விருப்ப ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடைகொடுக்கும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் செல்வி அவர்கள் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிலைய எழுத்தர் சக்திவேல், முதல் நிலை காவலர் தேவிபாலா, திருச்சிற்றம்பலம் பெண் காவலர் யோகிதா, சிவக்குமார், வினோத்குமார், கண்ணன் உள்ளிட்ட சக காவல்துறையினர் மற்றும் பாரதகலாரத்னா, முனைவர், வேத.குஞ்சருளன் ஆகியோர் பாராட்டி பேசி பொன்னாடை அணிவித்து பிரியாவிடைகொடுத்தனர். காவல் நிலையம் சார்பில் விருப்ப ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பத்மநாபன் அவர்களுக்கு மோதிரம் அணிவித்து அன்பை தெரிவித்தனர்.