தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.பிரவேஷ் குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில் 06.01.2022 அன்று SI R.மகேந்திரன் , SSIN.கந்தசாமி , SSI.S.கண்ணன் HC1888 K.இளையராஜா , Gri1281 K.சுந்தர்ராமன்
Gri 1025 R விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்… தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகே வெளிமாநில மது பாட்டில்களையும் கலப்பட மது பாட்டில்களையும் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி தமிழக அரசால் தடை செய்யபட்ட வெளி மாநில மது பாட்டில்களையும் கலப்பட மது பாட்டில்களையும் வாங்கி வந்து தஞ்சாவூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1340 வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்…
வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் விற்பனை செய்துவந்த கமல், பிரபாகர், ஹரி பிரசாத் ஆகிய மூன்று நபர்களை கைது செய்த தஞ்சை சரக தனிப்படையினருக்கு தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களும், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களும், மற்றும் உயரதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.