தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சுதாகர், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில் (04.04.2022) அன்று மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 02 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், மேற்படி குற்றத்தில் ஈடுபட்ட 03 நபர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 8.300 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறையினரால் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் மீதான இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான செயலில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும்.