புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து அறந்தாங்கி உட்கோட்டத்தில் சமூக நல்லிணக்க கூடைப்பந்து போட்டி அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 04.04.2022 அன்று நடைபெற்றது.
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் A.சரவண சுந்தர் இ.கா.ப., அவர்களின் அறிவுறித்தலின்படியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் அறந்தாங்கி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் உட்கோட்ட நிர்வாகத் துறை நடுவர் அவர்களின் ஏற்பாட்டின் படி அறந்தாங்கி உட் கோட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை இணைந்து சமூக நல்லிணக்க கூடைப்பந்து போட்டி அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் வெற்றிக் கோப்பை வழங்கி வாழ்த்தி சிறப்பித்தார்கள்.