புதுக்கோட்டை உட்கோட்டத்தில் 26.03.2022 – ஆம் தேதியன்று நகர உட்கோட்டத்தில் காவல்துறை சார்பில் காவலர்கள் பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் வாலிபால், கிரிக்கெட் மற்றும் இறகுப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.
மேற்கண்ட போட்டிகளில் கிரிக்கெட் போட்டியானது மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி மைதானத்திலும், இறகுப்பந்து போட்டியானது இறகுப்பந்தாட்ட உள் விளையாட்டு அரங்கிலும், வாலிபால் போட்டியானது மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் (Stadium) நடைபெற்றன. இதில் வாலிபால் போட்டியில் புதுக்கோட்டை வாலிபால் ராக்கர்ஸ் கிளப் அணியினர் முதன் இடத்தையும், ஆலங்குடி காவல்துறையினர் இரண்டாம் இடத்தையும், புதுக்கோட்டை ஆயுதப்படை போலீஸார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். கிரிக்கெட் போட்டியில் கந்தர்வகோட்டை போலீஸார் மற்றும் பொதுமக்கள் முதல் இடத்தையும், புதுக்கோட்டை நகர போலீஸார் மற்றும் பொதுமக்கள் இரண்டாம் இடத்தையும், கணேஷ் நகர் போலீஸார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் பரிசுக்கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்கள்.
இந்த விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள். இந்தப் போட்டிகளில் சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 150 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.