தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் உட்கோட்டம் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈபி காலனி அன்னை சத்யா நகரில் பெற்ற தந்தையை மகனே அவரது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தனர்.
தஞ்சாவூர் ஈபி காலனி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜீவா இவரது தந்தை கரும்பாயிரம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே இவரது தந்தை இவரது மனைவிக்கு தெரியாமலேயே இரண்டாவது கல்யாணம் செய்து திருப்பூரில் வாழ்ந்து வந்துள்ளார். தண்ணி போட்டு தஞ்சாவூருக்கு வந்து மகனை அடிப்பது மற்றும் சத்தம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஜீவாவின் அம்மா ராதிகா இவர் சிங்கப்பூரில் வீட்டு வேலை பார்த்து வந்தார். தற்பொழுது சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து சுமார் ஒன்றரை மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த விஷயம் தெரிந்து ஜீவாவின் அப்பா கரும்பாயிரம் திருப்பூரிலிருந்து வந்து அவங்க அம்மாவிடம் சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே கையில் அரிவாளுடன் வந்து அவங்க அம்மாவும் பிள்ளையும் விடமாட்டேன் வெட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டி சுற்றி வந்துள்ளார். என்ன என்று செய்யத் தெரியாமல் மகன் ஜீவா அவரது நண்பருடன் சேர்ந்து திட்டம் தீட்டி நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அவர்கள் வீட்டு வாசலிலேயே வெட்டி படுகொலை செய்தனர். இதுசம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர்கள் உமாசங்கர் மற்றும் ராஜேஷ் மற்றும் காவலர்கள் அருள்மொழிவர்மன் நவீன் ஸ்ரீஜித் மற்றும் அழகு சுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை குற்றவாளியை நாஞ்சிக்கோட்டை அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் குற்றவாளியை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உதவி ஆய்வாளர் அபிராமி அவர்களிடம் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் அவர்கள் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.