தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி. A கயல்விழி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.F. அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் 5 காவலர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 18.05.2022-ம் தேதி மாலை தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த TN 12 5664 பதிவு எண் கொண்ட Mahindra Xylo காரில் கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் சுமார் 549 கிலோ கைப்பற்றியும், கடத்தலில் ஈடுபட்ட எதிரிகளான தஞ்சாவூரைச் சேர்ந்த பக்காராம், முகம்மது பாருக் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பர்வீன் குமார், உமர்பாருக் ஆகியோர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் தஞ்சாவூர், களிமேடு பகுதியில் உள்ள பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2221 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மொத்தம் சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 2770 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றியும், பன்னீர் செல்வம் மற்றும் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சோளாராம் ஆகியோர்களை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய Mahindra Xylo காரையும் பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்த தஞ்சாவூர் சரக காவல் தனிபடையினருக்கு தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி. A.கயல்விழி, இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.