சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஶ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கு. இந்த வழக்கில் மிக மிக துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை சம்பவம் நடந்த ஆறு மணி நேரத்தில் கைது செய்து, துரிதமாக செயல்பட்டு கொலையாளிகள் கொள்ளையடித்த பல கோடிகள் மதிப்புள்ள ஆயிரம் பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், எழுபது கிலோ வெள்ளிக்கட்டிகள், மேலும் கொலையாளிகள் தப்பியோட பயன்படுத்திய கார், கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றினர். மேலும் கொலை செய்யப்பட்ட தம்பதியர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட பண்ணை வீட்டையும் கண்டுபிடித்து, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மயிலாப்பூர் காவல்துறையினர்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு ஆறுமணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த மயிலாப்பூர் காவல்நிலைய காவல் துறை அதிகாரிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு IPS, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் IPS, சென்னை மாநகர கூடுதல் ஆணையாளர் ( தெற்கு ) கண்ணன் IPS மற்றும் இனை ஆணையாளர் ஆகியோர் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினர். தமிழக முதல்வர் மயிலாப்பூர் காவல்நிலைய அதிகாரிகளை நேரில் அழைத்து பாரட்டியது தமிழக காவல்துறைக்கே பெருமைக்குரிய பெருமைசேர்க்கும் விதமாக உள்ளது.
பரபரப்பாக பேசப்பட்ட இந்த இரட்டைக் கொலை வழக்கில் திறம்பட செயல்பட்ட மயிலாப்பூர் காவல்நிலைய ஆய்வாளரான எம். ரவியின் பின்னணி குறித்து விசாரிக்கையில்….
மயிலாப்பூர் காவல் நிலையத்தின் ஆய்வாளரான ரவி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகிலுள்ள வேப்பம்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை மாரிமுத்து கவுண்டர் கடுமையான உழைப்பாளி. இவருக்கு சொந்தமாக ஏராளமான விளை நிலங்கள் இருந்ததால் அப்பகுதியில் நிலக்கிழாராகவும், பாரம்பரிய விவசாய குடும்பம் என அந்த பகுதியில் பெயர் பெற்று விளங்கினார்.
ஆய்வாளர் ரவியும் சிறு வயது முதலே பள்ளியில் சிறந்த மாணவராகவும், கடுமையான உழைப்பாளியாகவும் திகழ்ந்தார். தான் எப்படியும் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து, தனது கடுமையான உழைப்பால் இந்த காவல் துறை பணிக்கு வந்துள்ளார் என்று அவருடைய பிறந்த ஊரான வேப்பம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பேசிக்கொள்கிறார்கள்.
மேலும் ஏழை, எளிய மக்களுக்காக பலவிதமான உதவிகளையும், கல்விக்காக என தன்னை நாடி வருபவர்களுக்கு, தன்னலமற்ற சேவையாக சிரித்த முகத்தோடு உதவி செய்யக்கூடிய நபராகவும் விளங்கி வருகிறாராம்.
காவல் துறையில் ரவியின் வியக்கத்தக்க பணிகள்…
இந்தியாவில் பல மாநிலங்களில் துப்பாக்கி முனையில் பல கோடிகளை கொள்ளையடித்து வந்தனர் பீகார் கொள்ளையர்கள். இறுதியாக தமிழ்நாட்டுல் சென்னையில் உள்ள கீழ்கட்டளை பாரத ஸ்டேட் வங்கியில், பட்ட பகலில் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்கள், பொதுமக்களை மிரட்டி பல லட்ச ரூபாய்களை கொள்ளையடித்து சென்றனர். அந்த சம்பவம் நடந்தது 2012 அப்போது சென்னை மாநகர கமிஷனராக திரிபாதி, இணை ஆணையராக சன்முக ராஜேஸ்வரன், தேனாம் பேட்டை ஆய்வாளர் ரவி தலையில் தனிப்படை அமைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட தனிப்படையினர் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் பதுங்கியிருந்த பீகார் கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த கை துப்பாக்கியால் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். போலிசாரும் தங்களுடைய உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அரசு வங்கியில் கொள்ளையடித்த பொதுமக்கள் பணத்தை மீட்பதற்காகவும் நடத்திய துப்பாக்கி சண்டையில் இந்தியாவையே கலக்கி வந்த பீகார் கொள்ளையர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும் இவர் புளியந்தோப்பு ஆய்வாளராக இருந்த போது பல்வேறு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கொடுங்குற்றவாளி ஒருவரை அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலறிந்து கைது செய்ய சென்ற போது, அந்த நபர் போலிசாரை சரமாரியாக அரிவாளை கொண்டு வெட்ட, சக போலீசாரை காப்பாற்ற ஒரு துப்பாக்கி சூடு நடத்தி பல போலீசாரை காப்பாற்றினார். அப்போதும் பல காவல் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் புளியந்தோப்பு பகுதியில் இன்றளவும் பொதுமக்களின் பாராட்டை பெற்றவர். இவர் புளியந்தோப்பு ஆய்வாளராக இருந்த போது அந்த ஏரியாவில் போதை வஸ்துக்கள், ரவுடிகளை அடக்கிய நபர்.
தற்போதைய மயிலாப்பூர் இரட்டை கொலை, கொள்ளை வழக்கில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு தமிழக காவல்துறைக்கும் சென்னை மாநகர காவல்துறைக்கும் பெருமை சேர்ந்துள்ளார். மேலும் ஆய்வாளர் ரவி, மயிலாப்பூர் சரக உதவி ஆணையாளர் கவுதமன், மயிலாப்பூர் காவல்நிலைய அனைத்து காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.