புதிதாக உருவாக்கப்பட்ட, தாம்பரம் போலீஸ் கமிஷனராக, டி.ஜி.பி., ரேங்கில் பணியாற்றி வந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி பணி ஓய்வு பெற்றார். இவருக்கான பிரிவு உபசார நிகழச்சி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர், ரவியை வாழ்த்தி பேசினர். சைலேந்திரபாபு பேசியதாவது: நானும், ரவியும் மதுரையில் வேளாண் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். ரவி விடாமுயற்சிக்கு சொந்தக்காரர். டில்லியில், வங்கியில் பணியாற்றியபடி, ஐ.பி.எஸ்., தேர்வுக்கு தயாரானார். டில்லி சென்ற போது, நானும் அவரது அறையில் தங்கினேன். பிறருக்கு உதவி செய்வதை மிகவும் விரும்புவார். ரவியை போல், மற்ற அதிகாரிகளும், போலீசாரும் நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கமிஷனர் ரவி பேசுகையில், ”காவல் பணியைத்தான் முடித்துள்ளேன்; மக்களுக்கான பணி தொடரும். இனி சீருடை அணிய முடியாதே என்பது தான் வருத்தமாக உள்ளது,” என்றார்.