திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் படியும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் தனது காவலர்களுடன் 13-6-22 இரவு ஒட்டங்காடு கடைத்தெருவில் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தார். அப்போது ஒட்டங்காடு அம்மன் ஹோட்டலில் சந்தேகப்படும் படியாக இரண்டு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் தனது முகவரியை முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். மேலும், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதம்பை வடக்கு சங்கர் மகன் விஜய் என்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்கா முருகன் மகன் அஜித் என்றும் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா ஆனந்தன் மகன் முத்துராமன் என்கின்ற ஜீவா என்றும் என்றும் கூறினார்கள்.
மேலும் இவர்களை விசாரிக்கும்போது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திருச்சிற்றம்பலம், பாப்பாநாடு. ஒரத்தநாடு. சேதுபாவாசத்திரம். பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இரவில் வழிப்பறிக் கொள்ளை வாகன திருட்டு மற்றும் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து நகைகளை கொள்ளை அடிப்பது தனியாக தூங்கும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற குற்ற செயல்களை செய்து வந்ததை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து 12 பவுன் நகை மற்றும் சம்பவத்துக்கு பயன்படுத்திய வாகனத்தை கைப்பற்றப்பட்டது மேற்கண்ட எதிரிகளை பேராவூரணி குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது மேற்கண்ட களவாடிய சொத்தின் மதிப்பு சுமார் ஆறு லட்சம் ஆகும். குற்ற செயல்களை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் தனிப்படை மற்றும் காவலர்களை அதிகாரிகள் பாராட்டினார்கள்.