ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் நம்பி (49) என்பவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நிலத்தின் ஆவணங்களை அடமானமாக வாங்கிக்கொண்டு அவருக்கு ரூபாய் 2,50,000/-த்தை வட்டிக்கு கடன் கொடுத்து அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கடந்த 09.06.2022 அன்று மேற்படி எதிரி நம்பி என்பவரை கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் மேற்படி எதிரி நம்பி என்பவரது வீட்டை (10.06.2022) சோதனை செய்ததில், அவரது வீட்டிலிருந்து தொகை நிரப்பப்படாமல் கையெழுத்துக்கள் மட்டும் போடப்பட்ட 6 காசோலைகள் (Cheque) உட்பட 26 காசோலைகள் உள்ள ஒரு காசோலை புத்தகம், கடன் பெற்றவர்களின் 3 ATM கார்டுகள், நம்பி ஒருவரிடம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றதற்கான ஆவணம், அண்ணாமலை என்ற பெயரில் கையெழுத்து, கைரேகை மற்றும் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட ஒரு வெற்று பத்திரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் நாசரேத் ஆகிய சார்பதிவாளர் அலுலவலகங்களில் பத்திரபதிவு நடைபெற்ற வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட 6 CDக்கள், காசோலை மோசடி வழக்கு சம்மந்தமான ஆவணம், கடன்பெற்றவரின் ரூபாய் 12,000/- மதிப்புள்ள அடமான கடன் பத்திரம் 1, கடன்பெற்றவரின் பத்திர பதிவு செய்யப்படாத பத்திரம் 1, நம்பியிடமிருந்து ஒருவர் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றதாக எழுதிகொடுத்த பத்திரம் 1, தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள்அடகு வைக்கப்பட்ட ரசீது நகல் 1, ரூபாய் 1 லட்சத்திற்கு கடன் கொடுத்தற்கான பத்திரம் 1, எதிரி நம்பி தனது வங்கி கணக்கில் ரூபாய் 3,01,000/- தொகை செலுத்தியதற்கான ரசீது மற்றும் கடன் பெற்ற 2 பேர்களின் இரு சக்கர வாகனங்களின் RC புத்தகங்கள் உட்பட 22 ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் அளித்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.