04/06/22 அன்று தமிழக ஆளுநர் வழி காவல் பாதுகாப்பு பணியில் பொழுது நான் சென்னை ஜிஎஸ் ரோட்டில் அமைந்துள்ள M.H பாயிண்டில் பணிபுரிந்தேன்.
அச்சமயத்தில் ஒரு வாகனமானது ( PY01CW6394 Yamaka FZ ) வழியை மறித்து நின்று கொண்டிருந்தது அந்த வாகனத்தை ஓட்டிவந்த நபர் என்னை கண்டதும் வாகனத்தை விட்டு விட்டு ஓடிவிட்டார்,
வாகனத்தில் சாவி இல்லை உற்று நோக்கும் பொழுது வாகனத்தில் உள்ள மின் இணைப்பை துண்டித்து ஒட்டி வந்தது தெரிய வந்தது
திருட்டு வாகனமாக இருக்குமோ என்கிற
சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து அந்த வாகன எண்ணில் உள்ள முகவரியை பார்த்த பிறகு அதிலிருந்த அலைபேசியை தொடர்பு கொண்டபோது…
அந்த வாகனமானது இரண்டு நாட்களுக்கு முன்பாக தன் தளத்தில் அமைந்துள்ள எனது கல்லூரி வளாகத்தில் திருடு போய்விட்டது என்றும் அதற்காக நான் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளேன் என்றும் கூறினார்,
உடனே உங்கள் வாகனத்தின் அசல் ஆவணங்களை அனைத்தையும் எடுத்துக்கொண்டு மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சமர்ப்பித்து உங்கள் வாகனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
என்று நான் கூறினேன்..
அதன் அடிப்படையில் நேற்று அவர்கள் அசல் ஆவணங்களோடு வந்து என்னை பார்த்தார்..
அசல் ஆவணங்களை சரிபார்த்தபின் திருடுபோன விலை உயர்ந்த Yamaga FZ ( அதன் மதிப்பு இரண்டு லட்சம் ) இருசக்கர வாகனத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தேன்…
இதை செய்தியாக வெளியிடுவதற்கு நான் பல நபர்களை தொடர்பு கொண்டேன் யாரும் காவல்துறைக்கு சாதகமான செய்தியை வெளியிட முன்வரவில்லை என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயமாகும்….
காவல் துறைக்கு பாதகமான செய்திகளை வீடியோக்களை இந்த சமூகமானது அதிகம் பகிர்கிறது, இன்றைய ஊடகங்களும் காவல்துறைக்கு பாதகமான செய்திகளை வெளியிடுவதில் மட்டுமே குறியாக உள்ளது..
சில தினங்களுக்கு முன்பாக கோவையில் போக்குவரத்து காவலர் ஒருவர் உணவு பார்சலை டெலிவரி செய்யும் நபரை தாக்கிய வீடியோவை பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்தார்கள் பழச்சாறை விட்டு விட்டு சக்கையை மட்டுமே பெரிதுப்படுத்தும் இந்த சமூகத்தில் மாற்றம் என்பது கானல் நீரே ஆகும்
நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர் எழுதிய பாடலின் படி..
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்..
கருமமே கண்ணாயினார் என்ற நோக்கத்தில் சமூக மேன்மைக்காக பாடுபடும் என்போன்ற காவலர்களை இந்த சமூகமானது கண்டு கொள்ளாத போதும் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மனதில் வைத்து நாட்டில் நடைபெறும் குற்றங்கள் கொலைகள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்ற சமூக அநீதிகளுக்கு துணை போகாமல் காவல்துறைக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று உங்களில் ஒருவனாக நான் வேண்டுகோள் வைக்கிறேன்.!!!
பெ. மணிமாறன் @ சமூகக் காதலன்
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
உதவி ஆய்வாளர்,
S -1 மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையம்,
சென்னை.