சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தேசிய அகாடமியில் பயிற்சியில் முதலாவதாக வந்து வாள் பெற்றவர் அணிவகுப்பை வழிநடத்தியவர். காக்கிச் சட்டையை நேசித்து, மிகவும் துணிச்சலாக நடவடிக்கைகள் எடுத்து பல அதிரடிகள் செய்த இவர் உளவுத் துறையின் தலைவராக வருவது அந்த துறைக்குப் பெருமை சேர்க்கும். மத்திய உளவு அமைப்பிலும் நீண்ட அனுபவம் இவருக்கு நிச்சயம் உதவும். உளவுத்துறை ஐ.ஜி.யாக டாக்டர். செந்தில்வேலன் ஐ.பி.எஸ் நியமனம். இராமநாதபுரம் மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் நேர்மையான அதிகாரி. காவல் பணியை கமுதியில் துவங்கியவர். நேக்கு போக்கா பேசி விசயத்தை நம்மிடமே கறந்து FlR போட்டு சிறையில் தள்ளுவதில் கிள்ளாடி. சாமி (விக்ரம் படம்) போலீஸ் என கமுதியில் பேர் எடுத்தவர்.
இளம் வயதிலையே சிக்கல்கள் பல கடந்து சிகரம் தொட்ட செந்தில்வேலன், நம்பிக்கை. மிடுக்கான தோற்றம். துடிப்பான வேகத்தோடு ரவுடிசத்தை களை எடுத்து வருகிறார். இவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் உரிய மரியாதையுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) வழங்கப்படுகிறது. மேலும் அதன் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. மருத்துவம் படித்தவர் என்பதால் அடுத்த நிலை அதிகாரிகளின் மனநிலை உடல்நிலை அறிந்து அதற்கு ஏற்ப கட்டளை பிறப்பிக்கிறார். அரசியல்வாதிகளுக்கு கார் கதவை திறந்துவிடும் அதிகாரிகளுக்கு மத்தியில், இவரை கண்டால் அரசியல்வாதிகளும் பயப்படும் நிலையை உருவாக்கியவர்.
இவருக்கு சொந்த ஊர் மதுரை. இவர் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அம்மா ஆசிரியை, மூன்று அக்கா. இவர்தான் கடைசி பையன் இவர் தாத்தாவோட அப்பா ஆங்கிலேய இந்தியா காலத்தில் போலீஸில் இருந்தவர். இவர் தாத்தாவும் போலீஸ்தான். அதனால் சின்ன வயசில் இருந்துதே போலிஸா ஆகணும்னு ஆசையோடு வளர்ந்தவர், ஆனால் இவர் தந்தை இவர் டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டார். சின்னதாக் குழப்பம். முதல்ல அப்பா ஆசையை நிறைவேத்துவோம். அப்புறம் போலீஸ் ஆகலாம்னு முடிவு செய்தார். அப்பாவுக்காக மருத்துவ படிப்பை தொடர்ந்தார், மூன்றாவது வருடம் படிச்சுட்டு இருக்கும் போதே இவர் தந்தை மறைந்துவிட்டார், பின்னர் மருத்துவ படிப்பை படித்துவிட்டு அரசு மருத்துவராக வேலைக்குச் சேர்ந்தார்….
ஆனால் இவருக்குள் இருந்த போலீஸ் கனவோடு எப்பவும் இவர் சமரசம் செஞ்சுக்கவே இல்லை. வேலை பார்த்துகிட்டே படிக்க ஆரம்பித்தார், நம்பிக்கையோடு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார் எதிர்பார்க்காத ஆச்சர்யம் இந்திய அளவில் 86 ஆவது ரேங்க் ஐ.ஏ.எஸ். ஆகவே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஐ.பி.எஸ்தான் இவர் சாய்ஸ்னு உறுதியாக இருந்தார், ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார்…
முதல் முறையா ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஏ.எஸ்.பி பொறுப்பு.ரொம்ப சென்சிட்டிவ் ஏரியா. எப்பவும் சாதிக்கலவரம் பத்தியெரியாக் கூடிய அசாதாரணச் சூழல். நெருக்கடிமிக்க சூழல்தான் அதிக அனுபவத்தையும்,அதிக அறிவையும் பெற்றுகொள்ளும் காலம்னு சொல்லுவாங்க. அதுஉண்மை. அடுத்ததா சிதம்பரத்தில் ஒரு வருஷம் ஏ.எஸ்.பியா இருந்தார், மக்களுக்கு எதிரா,சட்டத்துக்கு விரோதமா உள்ள எல்லா விசயங்களையும் முடக்கணும். நல்லவங்க மட்டும்தான் ரோட்டில் தைரியமா நடமாடணும்.அப்படி ஒரு சூழல் வர்ற வரைக்கும் எனக்கு நிம்மதியானறீ உறக்கம் இல்லை! என்கிறார் செந்தில்வேலன் தஞ்சையில் இவர் பணி புரிந்த போது மிகவும் நல்ல பெயர் எளிய மக்களும் நேரிடையாக அணுக முடிந்தது.