தஞ்சாவூர் சரகத்திற்க்குட்பட்ட தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா, குட்கா, லாட்டரி, குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி. A.கயல்விழி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், தலைமையில் தனிப்படை காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மயிலாடுதுறையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த மயிலாடுதுறையை சேர்ந்த லட்சுமண நரசிம்மன் மற்றும் நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி நம்பர் எழுதப்பட்ட துண்டு சீட்டு, 5 செல்போன்கள் மற்றும் ருபாய். 32,260/மட்டும் கைப்பற்றி மயிலாடுதுறை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்த தஞ்சாவூர் சரக தனிப்படையினரை தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் பாராட்டினார். மேலும், கஞ்சா, குட்கா, லாட்டரி சம்மந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக 04362-277577, 04362-277477 தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.