கடந்த 29.09.2022 – ம் தேதி வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை சின்ன கோவிந்தப்பட்டி அருகே பள்ளிகொண்டா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு பாஸ்கர் மற்றும் முதல் நிலைக் காவலர் திரு பிரேம் ஆகியோர் வழியாக இரவு ரோந்து சென்றபோது நான்கு நபர்கள் ஒரு காரில் இருந்து லாரிக்கு ஏதோ ஒரு பண்டல்களை ஏற்றிக்கொண்டு இருந்தவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரிக்க அவர்கள் தங்களின் பெயர் விலாசம் தெரிவிக்க மறுத்தும், போலீசார் அந்த பண்டல்களை சோதனை செய்ய தடுத்தும்,கொலை மிரட்டல் விடுத்தனர் உடனே கூடுதலாக போலீசார்களை வரவழைக்கப்பட்டு அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 48 பண்டல்களை சோதனை செய்து அவற்றில் 2000, 500,200, மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கட்டுகளாக மொத்தம் ரூ 14,70,85,400/- இருந்தனர் அவற்றை சென்னையிலிருந்து கேரளாவிற்கு அனுப்பி வைப்பதாக காரில் இருந்து லாரிக்கு மாற்றி வைத்துக் கொண்டு இருந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்
இந்த நற்செயலை பாராட்டி இன்று 01.10.2022 -ம் தேதி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சி. சைலேந்திர பாபு, இ.கா.ப., (படைத்தலைவர்) அவர்கள் நான்கு காவலர்களையும் நேரில் அழைத்து அவர்களுக்கு பண வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டினார்….
மேலும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.