- ஒரு தூய்மை காவலர் ஊராட்சி மன்ற தலைவரோடு திருமண விழாவில் சமமாக அமர்ந்து சாப்பிட்டதற்காக எப்படி என்னோடு சமமாக அமர்ந்து சாப்பிட்டாய் என்று அவமானமாக பேசி அடிக்க பாய்ந்தது.
- 100 நாள் வேலையில் பணிதள பொறுப்பாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள்ளேயே சண்டை அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அசிங்கப்பட்டது. சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாதனை. 100 நாள் வேலை திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்களை 3 ஆண்டுகளாக பணி அமர்த்தியது சாதனை.
- நவக்கொல்லைக்காடு பிள்ளையார் குளத்தில் மண் அள்ளி விற்று 4 லட்சம் வரை ஊழல் செய்து பத்திரிகையில் செய்தி வந்து அசிங்கப்பட்டது சாதனை.
- ஊமச்சி புஞ்சை அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து தனது வயலுக்கு ரோடு போட்டு ஙிஞிளி வரை புகார் சென்று விசாரணை நடந்தது சாதனை.
- மேல ஒட்டங்காடு பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்க பள்ளியில் இடத்தை தாரைவார்த்து கொடுத்ததால் கிராம மக்களால் தடுத்து இன்னும் எலும்புக்கூடாக கம்பி அப்படியே கிடப்பது.
- ஊமச்சி புஞ்சை அங்கன்வாடி கட்டிடம் 2 வருடமாக கட்டி முடிக்காமல் ஙிஞிளி வரை ஆய்வு செய்து அசிங்கப்பட்டது.
- ஊராட்சி செயலாளரை வேலை செய்ய விடாமல் பொதுமக்களை திரட்டி ஒரு அரசு ஊழியரை அசிங்கப்படுத்தியது சாதனை.
- பொதுமக்களின் தேவைகளை கேட்டு யார் தலைவரை கேட்டாலும் எனக்கு தெரியாது.. என்னால் முடியாது என 3 வருடமாக எந்த திட்டங்களும் செயல்படுத்தாமல் இருப்பது.
- 200 அட்டைதாரர்களின் நலன் கருதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசு அவர்களின் பெரும் முயற்சியால் ஒட்டங்காட்டில் இருந்து மதன்பட்டவூருக்கு பகுதி நேர அங்காடி கொண்டு வந்தார். பல வருடங்களாக இருந்த அங்காடியை திரும்ப ஒட்டங்காட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்து மூன்று கிராம மக்களை கொடுமை படுத்திய சாதனை.
- ஊராட்சி மக்கள், யார் ரோடு வேண்டும், பாலம் வேண்டும் , சுடுகாடு வேண்டும் என்றால், நான் செலவு செய்த பணமே இன்னும் எடுக்கவில்லை என்று மூன்று வருடமாக ஒரே பதிலை சொல்லும் சாதனை.
- நவக்கொல்லைக்காடு ஆதிதிராவிடர் சுடுகாடு கட்டிடம் கேட்கும் இருதரப்பினரிடையும் உள்ள பிரச்சனையை காரணம் காட்டி 2 வருடங்களாக சுடுகாடு கட்டிடம் கட்டமால் இருந்து சாதனை.
- குடிநீர் தேக்க தொட்டி மாதாமாதம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆர்டிஐ.,யில் தகவல் சொல்லி உள்ளார். வருடத்திற்கு ஒருமுறை கூட சுத்தம் செய்யப்படவில்லை.
இப்படி பல சாதனைகளை செய்து கொண்டு வரும் ஊராட்சித்தலைவரை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வரும் ஆவனம் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆட்சியர் அலவலகத்தில் செயல்படும் உயரதிகாரிகள் இனிமேலாவது இவரின் சாதனைகளை கருத்தில் கொண்டு ஆட்சியரிடம் விருது வழங்க பரிந்துரைப்பார்களா..?