சென்னை பெருநகர காவல் துறையில் 354 காவல் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 100 வாகனங்களுக்கு தனியார் வங்கியின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22.75 லட்சம் செலவில் புதிய வண்ண ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ரோந்து வாகனங்களை எளிதாக கண்டறியும் வகையில் இந்த புதிய வண்ண ஒளிரும் விளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்த வகையிலான வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட 100 ரோந்து வாகனங்களை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கொடியை அசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.