94 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 பழமை வாய்ந்த சிலைகளை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கடத்தி விற்றதற்காக சர்வதேச சிலை கடத்தல் மன்னனாக விளங்கிய அமெரிக்க குடியுரிமை பெற்ற சுபாஷ் சந்திர கபூர் என்பவருக்கு எதிராக 2008 -ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் இன்டர்போல் போலீசாரின் உதவியுடன் கைது செய்து விசாரித்து சுபாஷ் சந்திர கபுருக்கு 13 வருட சிறை தண்டனையும் 7000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த பாலமுருகன், கூடுதல் காவவல் கண்காணிப்பாளர், நடராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், (ஓய்வு) உதயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர், (ஓய்வு) மற்றும் காவலர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் 03.11.2022 அன்று நேரில் அழைத்து ரொக்கபரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காவல்துறை இயக்குனர் திரு.கி.ஜெயந்த்முரளி, இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தார்.