05.11.2022 அன்று தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில்… SI F.அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் SSI N.கந்தசாமி, SSI. S.கண்ணன் K.இளையராஜா, Gri1281 K.சுந்தர்ராமன் Gri 2737 T.ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தொடர்ந்து தஞ்சாவூர் சரகத்தில் கஞ்சா மற்றும் குட்கா பான் மசாலா விற்பனை செய்து வருபவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர்.
தற்போது கிடைத்த ரகசிய தகவலின் படி தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா, பான் மசாலா (Hans -cool lip) என்ற போதைப்பொருளை கர்நாடகா மாநிலத்திலிருந்து இருந்து கண்டைனர் லாரி (MH 14 CP-0539) மூலம் ரகசிய அறை வைத்து குட்காவை நாகப்பட்டினம் மாவட்டம் பாலாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த கவாஸ்கர் என்பவருக்கு கொடுக்க கடத்தி வந்த போது கண்டைனர் டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த பிரதீப் என்பவரையும் நாகப்பட்டினம் மாவட்டம் பாலக்குறிச்சியை சேர்ந்த கவாஸ்கர் என்பவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கவாஸ்கர் என்பவர் டெல்டா மாவட்டங்களில் உள்ள பெட்டி கடைகளில் குட்கா பான் மசாலா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 50 லட்சம் மதிப்புள்ள சுமார் 2078/- கிலோ (2டன்) எடையுள்ள குட்காவையும் (Hans-cool lip) கண்டைனர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூரில் இருந்து கண்டைனர் லாரி மூலம் குட்காவை (Hans) கடத்தி வந்த நபர்களை கைது செய்த தஞ்சாவூர் சரக தனிபடையினருக்கு அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.