கேரள மாநிலம் சாத்தனூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் நகை போன்றவற்றை கொள்ளை அடித்து விட்டு இரண்டு நபர்கள் தமிழகத்திற்குள் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழக கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொண்டதில் பேருந்தில் வந்த குற்றவாளிகளான சுரேஷ் மற்றும் எட்வின் ராஜ் ஆகியோரை கைது செய்து கேரள மாநில காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சார்பு ஆய்வாளர் வெள்ளத்துரை, தலைமை காவலர் மாரிராஜ், முதல் நிலைக் காவலர்கள் பொன்ராஜ், முத்துக்குமார், தனிப்பிரிவு காவலர் அரவிந்த், காவலர்கள் விஜயன் மற்றும் முத்துராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்கள் நேரில் அழைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.