தமிழ்நாடு காவல்துறையில் -புதிய செயலி TracKD அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திரப்பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் 25.11.2022 அன்று சென்னை காவல்துறை தலைமையகத்தில் இந்த செயலியை அறிமுகப்படுத்தினார்கள். கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு. தாமரைக்கண்ணன், இ.கா.ப., மற்றும் மதுரை மாநகர முன்னால் காவல்துறை ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப.,ஆகியோர் உடனிருந்தனர்.