26.11.2022 ஆம் தேதி திருப்பூர் அவிநாசி பாரதி வித்ய கேந்த்ரா பள்ளியில் பயிலும் குழந்தைகள் திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு காவல்துறை நடைமுறைகள் சம்பந்தமான விவரங்களை கேட்டறிந்தனர். இதில் குழந்தைகளுக்கு முதலில் இனிப்பு வழங்கியதுடன், காவல் துறையில் உள்ள நடைமுறைகள், பல்வேறு வகையான குற்றங்கள், கைது நடவடிக்கைகள், குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டணைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் சமூகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் அவ்வகை குற்றங்களிலிருந்து பள்ளி குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், போக்குவரத்து விதிகள் மற்றும் அதனைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவான அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணசாமி அவர்கள் பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் பற்றி அறிவுரை வழங்கினார்கள். இதில் பாரதி வித்ய கேந்த்ரா பள்ளி குழந்தைகள் 98 பேரும், 07 ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.