தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் 21.12.2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் புகார் செய்து நிலுவையில் இருந்து வந்த புகார் மனுக்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரே நாளில் 45 புகார் மனுக்களில் 39 புகார் மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது.