தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா(40) மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலைய அடிதடி கொலைமுயற்சி,கொள்ளை போன்ற வழக்கின் குற்றவாளியான சுபாஷ்கண்ணன் (24), சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான ரகு (37) மற்றும் ஆலங்குளம் காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான ராசு @ செல்வராஜ்(34) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.T.சாம்சன் IPS அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி ஐந்து நபர்களும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்பிக்கப்பட்டது.