தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் காவல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு பதுங்கியிருந்த குற்றவாளியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த 3 இலட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.