போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஹிட்லர் அவர்களின் மேற்பார்வையில் வேளச்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜூன் பென்சன் அவர்கள் டான்சி நகர் அசோசியேசன் குடியிருப்பு வாசிகளுக்கும், வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் வாகனங்களை இயக்கம் வாகன ஓட்டிகளுக்கும் டான்சி நகர் புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், வேளச்சேரி அடையார் ஆனந்த பவனின் வளாகத்திலும் மற்றும் வேளச்சேரி சி ஷெல் உணவக வளாகத்திலும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும் வாகனம் இயக்கும் முறை பற்றியும் விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.அப்துல் மஜீத், திரு.பொன் இலவன், திரு.முருகன், திரு.விமல் குமார், திரு. மகேஷ் குமார், திரு. மதன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் முதல் நிலை காவலர்கள் திரு.கார்த்திபன், திரு. விஜயகுமார், தலைமை காவலர்கள் திரு.சிவமுருகன் மற்றும் திரு .கனகராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்