தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அறம் கல்வி அறக்கட்டளை சார்பாக 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை நமதே என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி பட்டுக்கோட்டையில் உள்ள டிடிசி மஹாலில் அறம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு.எக்யா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
இங்கு 400க்கு மேற்பட்ட மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் தன்னுடைய பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு துறை மற்றும் தனியார் துறையில் உள்ள அனைவருக்கும் தலைவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன.
அதில் கொரோன காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தீரன் திப்பு சுல்தான் விருதை சிறப்பாக பணியாற்றியதற்காக தலைமை காவலர் திரு.தர்மராஜன் அவர்களுக்கு திரு.எக்யா அவர்கள் வழங்கி சிறப்பித்தார். இதை போன்று சிறப்பாக பணியாற்றும் காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலருக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்சி பேராசிரியர் செய்யது அகமது கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதிய தலைமுறை ஊடகவியலாளர் வேதவள்ளி அவர்களும் யூடிபர் நாகராஜன் அவர்களும் திருமதி.சங்கீதா அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இதில் விருது பெற்ற தலைமை காவலர் திரு தர்மராஜன் அவர்கள் மாணவர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
அதில் “நான் பின்னாளில் மத்திய மாநில அரசு பணிகளில் வேலை பார்க்கும் சூழ்நிலையில் எனது பணிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பேன் என்றும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து அச்சம் தவிர்த்து பணியாற்றுவேன் என உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. வந்திருந்த மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.