திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மாநகரம், திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி 11.04.2023-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மத்திய மண்டலத்தில் பணிபுரியும் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் முதல் காவல்துறை தலைவர் வரை 18 பேர் கலந்து கொண்டார்கள். போட்டியில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் ஆகிய இரண்டு வகையான துப்பாக்கிகள் வழங்கப்பட்டது. இவற்றில்
இன்சாஸ் பிரிவு துப்பாக்கி சூடும் போட்டியில்
திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப, காவல்துறை தலைவர், மத்திய மண்டலம், திருச்சி அவர்கள் முதல் இடத்தையும்,
திரு.அஜய் தங்கம், துணைக் காவல் கண்காணிப்பாளர், லால்குடி உட்கோட்டம், திருச்சி மாவட்டம் அவர்கள் இரண்டாவது இடத்தையும்
திருமதி.வைஷ்ணவி, துணைக் காவல் கண்காணிப்பாளர், போதைபொருள் தடுப்பு சிறப்பு பிரிவு, திருச்சி மாவட்டம் அவர்கள் மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளார்கள்.
பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில்
திரு.தீபக் ராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர், ஆலங்குடி உட்கோட்டம், புதுக்கோட்டை மாவட்டம் அவர்கள் முதல் பரிசையும்
திரு.அறிவழகன், துணைக் காவல் கண்காணிப்பாளர், திருவெறும்பூர் உட்கோட்டம், திருச்சி மாவட்டம் அவர்கள் இரண்டாம் பரிசையும்
திருமதி.லில்லி கிரேஷி, துணைக் காவல் கண்காணிப்பாளர், பொருளாதாரக் குற்றப்பிரிவு, திருச்சி மாவட்டம் அவர்கள் மூன்றாம் பரிசையும் பெற்றார்கள்.
மேலும் மேற்படி துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டமைக்காக
திரு.அறிவழகன், துணைக் காவல் கண்காணிப்பாளர், திருவெறும்பூர் உட்கோட்டம், திருச்சி மாவட்டம் அவர்களுக்கு முதல் பரிசும்
திரு.தீபக் ரஜினி, துணைக் காவல் கண்காணிப்பாளர், ஆலங்குடி உட்கோட்டம், புதுக்கோட்டை மாவட்டம் அவர்களுக்கு இரண்டாம் பரிசும்
திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப, காவல்துறை தலைவர், மத்திய மண்டலம், திருச்சி அவர்களுக்கு மூன்றாம் பரிசும் கொடுக்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப, அவர்கள் பாராட்டி பரிசு பொருட்களை வழங்கினார்.