புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் உள்ள தனிப்படையினர் பொன்னமராவதி காவல் சரக வேந்தன்பட்டி கிராமத்தில் நடந்த இரட்டை ஆதாய கொலை வழக்கில் எதிரிகள் இருவர் கைது செய்தனர். இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து அதிரடியாக எதிரிகளை கைது செய்து காவல் துறைக்கு பெருமை சேர்த்த தனிப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்களை நேரடியாக வரவழைத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருமதி. வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் வெகுமதிகள் மற்றும் நற்சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்கள் . மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.