தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர் முனைவர் திரு.Pa.மூர்த்தி, இ.கா.ப.. ஆகியோர்களின் உத்தரவுப்படி ‘கஞ்சா வேட்டை 4.0’ என்ற தலைப்பில், கஞ்சா விற்பவர்கள், உள்ளூர் கஞ்சா வினியோகிஸ்தர்கள் மற்றும் கஞ்சா வழக்கு தலைமறைவு குற்றவாளிகள் ஆகியோர்களை கண்காணித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டி போடப்பட்ட உத்திரவுக்கு இணங்க மனிதனை மதி மயக்கும் கஞ்சா எனும் போதைப் பொருளை அறவே ஒழிக்க வேண்டுமென்ற உந்துதலினால், தாம்பரம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு K.அதிவீரபாண்டியன் மற்றும் தாம்பரம் காவல் சரக உதவி ஆணையாளர் திரு.S.A.சீனிவாசன் ஆகியோர்களின் உத்திரவின் பேரில்,
T1 தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சி.சார்லஸ் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புலன் வைத்து தொடர் தேடுதல் வேட்டையின் மூலம் தேடிய நிலையில், 03.05.2023 அன்று காலை 09.00 மணியளவில், முன்னாள் கஞ்சா வழக்கு குற்றவாளியான குட்டி (எ) பிரபாகரன், த/பெ ராமதாஸ், எண் 20, கைலாசபுரம் முதல் தெரு. மேற்கு தாம்பரம், சென்னை 45 என்பவரை தாம்பரம் இரயில்வே பேருந்து நிலையத்தில் கருப்பு நிற பிளாஸ்டிக் கவரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் பிடிபட்ட குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.