தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகம் திருவள்ளுவர் நகர் அருகே கடந்த 26.05.23 ம் தேதி காலை சுமார் 6:00 மணி அளவில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த வயதான பெண்மணியிடம் அவர் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்துவிட்டு அவரை கீழே தள்ளிவிட்டு சென்ற கொள்ளையனை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .ஆசிஷ் ராவத் IPS அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் TPS, (Crime Intelligence) கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன்(Crime Intelligence) தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார் (Crime Intelligence) தலைமை காவலர்கள் பாலசுப்ரமணியம், நாடிமுத்து, செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தொடர்ந்து 5 நாட்களாக cctv கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்ததில், மேற்படி கொள்ளையில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம், பண்ருட்டி, மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் வயது 38 (தற்போது பெருமாண்டி, கும்பகோணம்) என்பவரை கைது செய்து மேற்படி நபரிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட 7 சவரன் நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி நபரிடம் காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்..