திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் வழங்கியுள்ளார்கள். காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள்
தமிழக காவல்துறையில் “கொலை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Dabur Man என்ற இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு, அதற்கு காவேரி என்று பெயரிடப்பட்டது. மேற்படி மோப்ப நாய்க்கு கடந்த 01.12.2022-ந்தேதி முதல் 31.05.2023 வரை சென்னை பரங்கிமலை பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் குற்ற வழக்குகளை விரைவாக கண்டறிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டும், (02.06.2023)-ந்தேதி முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் முன்னிலையில் திருச்சி மாநகர மோப்பநாய்படை பிரிவில் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளது.