வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப. தலைமையில் நடைபெற்றது. இதில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களான இ.கா.ப. அதிகாரிகள் கிரன் ஸ்ருதி, கார்த்திகேயன், மணிவண்ணன், ஆல்பர்ட் ஜான் ஆகியோரும், 250 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது காவல்நிலைய பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சியை முருகானந்தம் அளித்தார்.
இந்த பயிற்சியின் மூலம் காவல்துறையில் பதிவேடுகள் முழுமையாக பராமரித்தல், குற்றபதிவேடுகள் சரியாக பராமரித்தால், குற்றவாளிகள் தப்பித்து விடாமல் இதன் மூலம் கண்டறியலாம், நிலைய எழுத்தர்களுக்கு பணிசுமை குறையும் மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையிலான இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சி கூட்டத்தில் பயிற்சியை துவங்கி வைத்து வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் எம்.எஸ். முத்துசாமி பேசுகையில்… காவல்நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கபடுவதில்லை ஒரு குற்றம் நடக்காததை குற்றம் நடந்ததாக பதிவு செய்வதும் தவறு, குற்றத்தை மறைத்து பதிவு செய்யாததும் தவறு தான். ஒரு காவல்நிலையத்தில் நான் ஆய்வு செய்தேன் அங்கு எட்டு தகவலை ஒரே பதிவேட்டில் ஒருவர் பதிவேற்றம் செய்துள்ளது அதிர்ச்சியளித்தது. அந்த பதிவேடு தொலைந்தால் மீண்டும் எட்டு தகவல்களும் கிடைக்காது. காவல்நிலையங்களில் சரிவர பதிவேடுகள் பராமரிக்கப்படாதது மன வேதனையும் வலியையும் தருகிறது என்று பேசினார்.
மேலும் பேகையில், முக்கியமான பயிற்சி கோப்புகள் பதிவேடுகள் எப்படி பராமரிப்பது என காவல்துறைக்கு பயிற்சி அளிக்கபடுகிறது. 30 வருடங்களுக்குப் பின்னர் கூட குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரியும். எழுத்தர்களின் சுமையும் குறையும். எந்த முறையை கையாண்டால் கோப்புகளை எளிதில் பராமரிப்பது என தெரியும், இதன் மூலம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களின் காவல் நிலையங்கள் மேம்பாடு அடையும் என பேசினார்.