சென்னையில் நடைபெறும் குற்றச்சம்பவங்களில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் போலீசாரையும், விழிப்புணர்வு பணிகளில் சிறப்புடன் செயல்படும் போலீசாரையும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ் வழங்கி பாராட்டி வருகிறார்.
அந்த வகையில் சென்னை பூக்கடை போக்குவரத்து உதவி கமிஷனர் சம்பத் பாலன், யானைகவுனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசகம், தர்மன், ரமேஷ், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன், போலீஸ்காரர்கள் வெங்கடேசன், சரவணன், சரவணக்குமார், சிவராஜ், குமரேசன், சி.எம்.பி.டி. இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, போலீஸ்காரர் அசோக், கோயம்பேடு போலீஸ்காரர்கள் சுகேந்திரன், அசோக்ராஜ், தமிழரசன், நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, ரவிச்சந்திரன், போலீஸ்காரர்கள் விக்டர் இம்மானுவேல், கோபிநாதன், விஜயலட்சுமணன், வேல்முருகன், மயிலாப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் குமார், குமரன் நகர் இன்ஸ்பெக்டர் மணிமலா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், போலீஸ்காரர்கள் புருஷோத்தமன், ராஜசேகர், ராமாபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண், சீனிவாசன், போலீஸ்காரர்கள் சிவானந்தன், சுப்பிரமணியன், போலீஸ்காரர்கள் பிரகாஷ், வேல்முருகன், மாம்பலம் போக்குவரத்து போலீஸ்காரர்கள் தியாகராஜன், அழகுராஜா, ராமாபுரம் போலீஸ்காரர்கள் பிரபு, விஜயன் ஆகிய 40 பேர் கடந்த மாதம் கமிஷனரின் பாராட்டு பட்டியலில் இடம் பிடித்தனர். அவர்களை நேரில் வரவழைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை சைதாப்பேட்டை வி.வி.கோவில் தெருவில் கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற வழக்கில் 2 பேரை சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்த நீலாங்கரை போலீஸ்காரர் செந்தில்குமார் ஜூலை மாதத்தின் நட்சத்திர போலீஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு இந்த விருதுடன் ரூ.5 ஆயிரம் பண வெகுமதியை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார் சரத்கர், சுதாகர், அஸ்ரா கார்க், மகேஸ்வரி, இணை கமிஷனர் கயல்விழி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.