10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆதார் அட்டையை புதுப்பித்தல் கட்டாயம் என்று கடந்த மார்ச் 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது அதோடு ஜூன் 14 வரை இது இலவசம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தக் காலக்கெடு டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதாரை புதுப்பிக்க, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு அல்லது வேறு ஏதேனும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் அப்டேட் செய்வது எப்படி:-
https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் செல்லவும். அடுத்து அதில் லாகின் என்பதை கிளிக் செய்து உள் நுழையுங்கள்.
அதன்பின்பு உங்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபியை பதிவிடுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் ‘Document Update’ என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் உங்கள் ஆதார் விவரங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்து தங்கள் ஆதாரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆதாரில் உள்ள முகவரி மாற்றம் செய்ய:-
Update your Address Online என்ற வசதியை கிளிக் செய்யவும்.
உங்களிடம் சரியான முகவரிச் சான்று இருந்தால் “Proceed to Update Address” என்பதில் கிளிக் செய்யவும்.
அடுத்து உங்களது இருப்பிட முகவரியைப் பதிவு செய்து submit கொடுத்து முகவரிச் சான்றுக்கான சரியான ஆவணத்தின் ஸ்கேன் காப்பியை அப்லோடு செய்து ”submit” கொடுக்க வேண்டும். உங்களது ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கு ஒரு உறுதிப்படுத்தும் எண்ணும் வழங்கப்படும். இந்த எண்ணை வைத்து உங்களது ஆதார் அப்டேட் ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கலாம்.
தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைதொகை ஆதார் அப்டேட் செய்யப்படாததால் பலருக்கு சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.