கரங்கள் மடங்கினால் உருவாகும் புரட்சி
கைவிரல் நீட்டினால் மலர்ந்திடும் மக்களாட்சி
ஆள்காட்டிவிரல் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் மனசாட்சி
அதிகமான ஓட்டுகள் பெறுபவர்களே அரசாட்சி
இந்தியா மாபெரும் ஜனநாயக வல்லரசு
இயக்கிடும் இருசபைகள் இருதூண்களாய் மத்தியஅரசு
மத்தியமும் மாநிலமும் கைகோர்க்கும் ஒற்றுமை
மாசற்ற பாரதமாய் உருவெடுக்கும் வல்லமை
ஐந்தாண்டு தொண்டுகள் அரசாங்கம் ஆட்சிபீடம்
அனைத்தையும் கவர்ந்திடும் மன்னர்க்கே மீண்டும்இடம்
வஞ்சம் லஞ்சம் செய்பவர்களின் நெஞ்சம்
வசைபாடி கொஞ்சும் எதிர்ப்பே மிஞ்சும்
தேர்தல் வாக்குறுதிகள் தெவிட்டாத வார்த்தைகள்
தேர்வாகி வந்துவிட்டால் தெரிந்திடும் வல்லவர்கள்
மக்கள் திரளுவோம் நூறுசதவிகிதம் வாக்களிப்போம்
மக்களுக்கு உழைத்திடும் நேர்மையாளர்களை தேர்ந்தெடுப்போம்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்