3 ஆண்டுகளுக்குமுன் நடந்த கல்லூரி பஸ் எதிரே டான்ஸ் ஆடும் வீடியோவை பரப்பவேண்டாம் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூரில் தனியார் கல்லூரி வாகனத்தை நிறுத்தி சிலர் நடனமாடியதாக ஒரு வீடியோ கடந்த 6ம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தாலுகா எல்லைக்கு உட்பட்ட மாடப்பள்ளியில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த மாரியம்மன் கோயில் திருவிழா கரக ஊர்வலத்தின்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் டான்ஸ் ஆடியுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கல்லூரி பேருந்தை நிறுத்தி டான்ஸ் ஆடியதாக தொலைக்காட்சி மூலம் வந்த செய்தி தற்போது சமூக வலைதளம் மூலம் பரவி வருகிறது. இது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வாகும். தற்போது நடந்தது அல்ல. எனவே பழைய செய்திகளை தற்போது நடந்ததுபோல் பரப்பவேண்டாம் என மாநில டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.