புகார்தாரர் திரு.சோமசுந்தரம், மேலாளர், M/s.Upasana Finance Ltd., மைலாப்பூர், சென்னை என்பவரது கம்பெனியிலிருந்து M/s.UmaMaheswari Mill Ltd., Hosur என்ற நிறுவனத்தில் A2 ராமநாதன், A3 வள்ளியம்மாள், A4 ராம்மோகன், A5 ரமேஷ் மற்றும் A6 லட்சுமணன் வரை இயக்குநர்களாகவும், A7 நல்லகண்ணு என்பவர் பொது மேலாளராக பணிபுரிந்ததாகவும், இந்நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த 289 ஊழியர்களுக்கு Consumer Durable Loan பெற்று திருப்பி செலுத்தாமல் ரூ.98.47 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய மேற்படி எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் புலன் விசாரணை முடித்து இறுதியறிக்கை கூடுதல் சிறப்பு பெருநகர குற்றவியல் CCB வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 12 வருடங்களாக மேற்கண்ட எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை வழங்கப்பட்டு நிலுவையில் இருந்துவருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு, காவல் கூடுதல் ஆணையைாளர், முனைவர் P.K.செந்தில்குமாரி, இ.கா.ப அவர்களின் அறிவுரையின்படி காவல் துணை ஆணையாளர் திரு.G.ஸ்டாலின் அவர்களின் மேற்பாார்வையில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய காவல் ஆய்வாளர் திரு.H.சரவணன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து எதிரிகளை தேடிவந்த நிலையில் தனிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கண்டவழக்கில் 12 வருடங்களாக தலைமறைவாக இருந்த எதிரி A5-ரமேஷ் ஆ/வ.52 த/பெ.ராமநாதன் என்பவரை கடந்த 04.01.2024-ம் தேதி தி.நகர் பகுதியில் கைதுசெய்து அவரை விசாரணை செய்ததில், அவர் தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று OCI கார்டு மூலம் சென்னை வந்துள்ளது தெரியவந்தது.
எதிரியை கூடுதல் CCB வழக்குகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நடுவர் அவர்களின் உத்தரவின் பேரில் 12.01.2024ம் தேதி வரை நீதிமன்ற காவலில்
அடைக்கப்பட்டார்.
நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிடியாணையை நிறைவேற்றிய மத்திய குற்றப்பிரிவின் தனிப்படைக்கு தலைமை தாங்கிய வங்கி மோசடி
புலனாய்வு பிரிவின் காவல் உதவி ஆணையாளர் திரு.V.மனோஜ்குமார் மற்றும் தனிப்படை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.