சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்த ஞானவேல், வ/34, த/பெ.ஜெயபால் என்பவர் 30.04.2023 அன்று மாலை தரமணி, எம்.ஜி.ஆர் சாலை, ரயில்வே பாலம் கீழே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த போது, அருகில் மது அருந்திக் கொண்டிருந்த நபர்களுடன் தகராறு ஏற்பட்டபோது, எதிர் தரப்பினர் ஞானவேலை கை மற்றும் அருகில் கிடந்த கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக J-13 தரமணி காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.கோபி, வ/29, த/பெ.கிருஷ்ணன், முல்லை தெரு, திருவள்ளுவர் நகர், பெருங்குடி, சென்னை 2.கோட்டி (எ) கோட்டீஸ்வரன், வ/35, த/பெ.சத்தியநாராயணன், முல்லை தெரு. திருவள்ளுவர் நகர், பெருங்குடி, சென்னை 3.தர்மராஜ், வ/39, த/பெ.பெரியசாமி, முதல் குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர், பெருங்குடி, சென்னை ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பின்னர் நீதிமன்ற பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த குற்றவாளி கோட்டி (எ) கோட்டீஸ்வரன் 18.10.2023 முதல் மேற்படி கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால், கனம் சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரி கோட்டீஸ்வரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நீதிமன்ற பிடியாணை பிறப்பித்தது.
J-13 தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி கோட்டி (எ) கோட்டீஸ்வரன், வ/35, த/பெ.சத்தியநாராயணன், முல்லை தெரு, திருவள்ளுவர் நகர், பெருங்குடி, என்பவரை கைது செய்தனர். கோட்டி (எ) கோட்டீஸ்வரன் J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு ஆவார்.
கைது செய்யப்பட்ட எதிரி கோட்டீஸ்வரன் விசாரணைக்குப் பின்னர் (04.01.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.