சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தமுக்கம் சந்திப்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்.யி.லோகநாதன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் தலைக்கவச விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. மேலும் சாலை பயனாளர்களின் நன்மைக்காக இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் ஒளிரும் தன்மையை கட்டுப்படுத்தும் விதமாக கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. போக்குவரத்து துணை ஆணையர் ,போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் போக்குவரத்து கழக கூடுதல் ஆணையர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.